Saturday, 26 October 2013

விலையில்லா விஷயங்கள்...!விலையில்லா விஷயங்கள் !

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வகை தொகை இல்லாமல் இலவச திட்டங்களை அறிவிப்பது நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்த இயலாமல செய்து விடும். இவற்றையும் அவர்களின் தேர்தல் அறிக்கைகளையும் முறைப்படுத்தக் கூடிய சட்டவிதிகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லாத சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் “

---உச்ச நீதிமன்றம் பரிந்துரை.·         இலவசத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன. கட்சிகளோ அதன் தலைவர்களோ தங்கள் சொந்த பணத்தை இவற்றுக்காக செலவிடுவதில்லை. மக்களுக்கு இந்த புரிதல் வேண்டும்.

·         இலவசத் திட்டங்களை அறிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அவற்றின் பயனாளிகளின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது, எண்ணிக்கையும் பல கோடிகளாக உள்ளது என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

·         இந்திய அரசியல் கட்சிகளும் மக்களை தொடர்ந்து இலவசங்களுக்காக ஏங்கும் நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன. மீனைக் கொடுகிறார்களே தவிர மீன் பிடிக்க கற்றுத் தருவதில்லை.

·         தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிடும் இலவசத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பீடு எவ்வளவு அதற்கான நிதியை அவர்கள் எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். (தங்களை கசக்கிப் பிழிந்து எடுத்தச் சாற்றில் ஒரு பகுதியைத் தான் இலவசம் என்ற பெயரில் தங்களுக்கே குடிக்க கொடுக்கிறார்கள் என்பது அப்போது அப்பாவி மக்களுக்கு புலப்படும்)

·         தேர்தலுக்குப் பிந்தைய இலசத் திட்ட அமலாக்கம் என்பது தான் மிக முக்கியமான கட்டமாகும். பொருட்களை வாங்கும் முறை, விலை, தரம், பயனாளிகள் தேர்வு அவர்களுக்கு வழங்கும் முறை ஆகியனவே மிக முக்கியமாக கண்காணிக்கப் படவேண்டிய அம்சங்களாகும். ஆனால், தேர்தல் கமிஷன் இதில் எந்த அளவிற்கு தலையீடு செய்ய இயலும் என்பது விவாத்த்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

தேர்தலின் போது கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் இலவச திட்டங்களுக்கும் இதர காலங்களில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்குமான வித்தியாசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல் படுத்தப்படக் கூடியதொரு சூழலில், இந்தியா போன்றதொரு வளரும் ஜனநாயகத்தில் ‘இலவசம்என்பது ஒரு இழிவான, கேவலமான செயல் என்று எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில், இந்திய மக்களை இலவசங்களை மறுத்து தங்கள் சொந்தகாலில் நிற்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டிய தலையாய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இந்திய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, 16 October 2013
Ravindran Krishnamurthy
 
சாதி வெறிக்கு எதிராக.......

ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநில்ங்களில் இருக்கும் சாதீய ‘கப்’ ப்ஞ்சாயத்துகள் மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கும் மஹா பஞ்சாயத் போன்ற அமைப்புகளை தமிழ நாட்டிலும் ஏற்படுத்திட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள். அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் அடிவருடி சேவகம் செய்து கொண்டே இருக்கவேண்டும், கல்வியும் கூடாது காதலும் கூடாது , அரசு பணிகளும் கூடாது அவர்தம் வாழ்நிலையும் உயரவே கூடாது. ஆதிக்க சாதிகள் வெந்து புழுங்குகிறார்கள். நீ என்ன உயர்த்தி நான் என்ன தாழ்த்தி. இருவரின் உடலிலும் சிவப்பே குருதி. பகுத்தறிவால் சிவந்த இம்மாநிலத்தில் நாம் அணைவருமே சரி நிகர் சமம்.
 
Ravindran Krishnamurthy
 
வொய் திஸ் கொலை வெறி

அன்று
12/12 என்றார்கள்
நேற்று
21/12 என்றார்கள்
நாளை
மாயாண்டி காலண்டர் படி
13/13 என்பார்களோ
உலகம் அழிந்தே தீரவேண்டுமென
வொய் திஸ் கொலை வெறி
 
கண்ணை விற்று........

கிரீச் கிரீச்சென்று
முனகியபடியே சாலையில் சென்றது
மாபெரும் மரத்துண்டுகளை ஏற்றிய
நீண்ட நெடும் சரக்கு ஊர்தியொன்று
இரண்டு மூன்று தலைமுறைகளின்
ஒட்டு மொத்த சவ ஊர்வலமொன்று
கடந்து சென்றதாய் ஒரு நினைப்பு
சிதையுண்ட சுவற்றில் பின்னாளில்
எதை வரையப் போகின்றோம்
 
அன்று.....!

ஜனவரி 21 தேதியிட்ட ’குங்குமம்’ இதழில் எனது ‘கீதா என் காதலி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. நான், மனைவி, மகள் என்று ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மனைவி : “ யாருங்க அந்த கீதா “
மகள் : “பரிசு, சன்மானம் அப்படியெல்லாம் கிடையாதா...”
நான் : கதை பிரசுரமானதே எனக்கு கிடைத்த சன்மானம் தான் “

இன்று.....!

குங்குமம் அலுவலகத்தில் இருந்து என் சிறுகதைக்கு சன்மானமாக ரூ.400-க்கான காசோலை தபாலில் வந்திருந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மகிழ்ச்சியையும் நன்றியையும் ‘குங்குமம்’ இதழுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
Photo: அன்று.....!

நண்பர் ஒருவர் பதிவில் இன்னொருவர் திப்பு சுல்தான் இந்துக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது பதில்..இப்போது உங்களுடன்.

சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.”

மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.
 
Photo: நண்பர் ஒருவர் பதிவில் இன்னொருவர் திப்பு சுல்தான் இந்துக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது பதில்..இப்போது உங்களுடன்.

சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.” 

மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.

மருட்சி...!

மகிழ்ச்சியான மணவிழாவில்
மருட்சியாய் ஒரு முகம்

- - - - - - - - - - - - - -  -
பெண்ணின் அப்பா
தொலைவன.....தொலையட்டும்

கல்வித் தேடலில் அறியாமை தொலையும்
செல்வத் தேடலில் வறுமை தொலையும்
ஆன்மீகத் தேடலில் அஞ்ஞானம் தொலையும்
நல்லவை தேடலில் தீயவை தொலையும்கி.இரவீந்திரன்
 
Sri Varun Dev Temple at Manora in Karachi, Pakistan.
 
Photo: Sri Varun Dev Temple at Manora in Karachi, Pakistan.
 
இன்று – ஜூலை 12, 2013 - ‘மலாலா தினம்’

தாலிபான் தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த 15 வயதே நிரம்பிய பாகிஸ்தான் ‘அறிவொளி இயக்கப் போராளி’ மலாலாவின் துணிச்சலான கல்வி மற்றும் சமுதாயப் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான இன்றைய ஜூலை 12 ஐ ‘மலாலா தினமாக’ ஐ.நா சபை அறிவித்துள்ளது.

கல்வி பெறுவதற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைத்துப் பென்களுக்கும் இந்த தினத்தை காணிக்கையாக்குவதாக மலாலா அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் இலவச கல்வி வழங்கும் திட்டங்களை அமுல்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீவிரவாதிகளின் துப்பாக்கிகளை விட அறிவொளி இயக்கப் போராளியின் கையிலிருக்கும் புத்தகம் வலிமை வாய்ந்தது என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் மலாலா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் மலாலா !
 
Photo: இன்று – ஜூலை 12, 2013 - ‘மலாலா தினம்’

விநாயகருக்கு கொடுத்தது போக...மிஞ்சியதை ஒரு கை பார்த்தாச்சா.....!
 
Photo: விநாயகருக்கு கொடுத்தது போக...மிஞ்சியதை ஒரு கை பார்த்தாச்சா.....!
 
தமிழுக்கு
மீசை முளைத்தது
--------
பாரதியின்
கவிதைகளால்
Photo: தமிழுக்கு
மீசை முளைத்தது
--------
பாரதியின்
கவிதைகளால்

அநியாயம்.....இது அநியாயம் !

+2 தகுதி அடிப்படையிலான அரசு, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் உள்ள கிளர்க் பணிகளுக்கு அதிக கல்வித்தகுதி என்ற அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகளே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படி எல்லா இடங்களையும் இவர்களே ஆக்கிரமிக்கும் பட்சத்தில் +2, பி.ஏ, பி.எஸ்ஸி, பி.காம் மட்டுமே படித்த வசதி குறைவான மாணவர்களின் கதி என்னாவது ? இவர்களைப் போன்ற லட்சக்கணக்கானவர்கள் தான் இம்மாதிரி தேர்வுகளுக்கு 200, 300 என்று தேர்வுக் கட்டணத்தை வேறு கொட்டி அழுகிறார்கள். குறைந்த பட்சம் இது போன்ற எழுத்தர் பதவிகளுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்ற நடைமுறை அமுல் படுத்தப் பட வேண்டும்.

200, 300, 400 என தேர்வு கட்டண கொள்ளை அடித்து வரும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் தற்போது கட்டணத்தை அதிரடியாக ரு.600 என உயர்த்தியுள்ளது. ரூ.5000 என தேர்வு கட்டணத்தை உயர்த்தி விட்டால் ஏழைகளை ஒட்டு மொத்தமாக தேர்வு எழுத விடாமல் செய்து விடலாமே.
 
இந்த பைலட்டுக்கு ரொம்பத்தான்.......வால்......நீளம்.
 
Photo: Photoshop.
திரிச்சி.....மோசடி

உள்ளம் எல்லாம்
‘ நாது ராம் ‘
உதட்டில் மட்டும்
‘ ஹே ராம் ‘
திருச்சி என்றால்
திரிக்கலாமோ ?
 
Photo: திரிச்சி.....மோசடி

உள்ளம் எல்லாம்
‘ நாது ராம் ‘
உதட்டில் மட்டும்
‘ ஹே ராம் ‘
திருச்சி என்றால்
திரிக்கலாமோ ?
 
நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.

-கவிஞர் மு. மேத்தா
‘ கருப்பு காந்தியும் நெருப்புக் கவிதையும் ‘
 
இவர்கள் தான் நாளைய இந்தியாவை ஆளப் போகிறார்களாம்.....!
 
இது ஜெயராம் ரமேஷ் கூறிய போது பாஜக கட்சியினர் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றினார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி, இப்ப மோடி இதையே தான் கூறியிருக்கிறார் , இதே ஹிந்துத்துவா தொண்டர்கள் மோடி வீட்டுக்கு செல்வார்களா???
 
Photo: இது ஜெயராம் ரமேஷ் கூறிய போது பாஜக கட்சியினர் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றினார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி, இப்ப மோடி இதையே தான் கூறியிருக்கிறார் , இதே ஹிந்துத்துவா தொண்டர்கள் மோடி வீட்டுக்கு செல்வார்களா???
 
மனசெல்லாம்.....மத்தாப்பு.
 
Photo
 
மழை வந்ததாலே.....குடை வந்து சேருமே....!
100% natural umbrella (:
 
Photo: 100% natural umbrella (:
“ என் வழி..........”

” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது மூற்றிலும் நடைமுறை சாத்தியமற்றது. சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது. யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.

Photo: நண்பர் ஒருவரின் பதிவில் பகிர்ந்தது........உங்களுடனும்

“ என் வழி..........”

” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது மூற்றிலும் நடைமுறை சாத்தியமற்றது. சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது. யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.
தகுதி இருக்கின்றதா...?

பகத்சிங்கின் குடும்பத்தினர் ஆவேசம் பகத்சிங் நூலை வெளியிட நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை

புதுடெல்லி: விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் சிறை குறிப்புகள் பற்றிய நூலை நரேந்திர மோடி வெளியிட பகத்சிங்கின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு 

- தினகரன் நாளிதழ் -

” நான் ஒரு நாத்திகன் “ - என்று தன்னை பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட மாபெரும் புரட்சியாளன் பகத்சிங். அவரது வரலாற்றை பஜனை கோஷ்டிகள் எழுதுவது எப்படி பொருத்தமாக இருக்கும். விவேகானந்தரை ஆரம்பத்தில் மாமிசம் சாப்பிடுபவர் என்று எதிர்த்தார்கள் பின்னர் அவர் பெயரிலேயே ரத யாத்திரை நடத்தினார்கள், பாரதியை கூட இப்படித்தான் சொந்தம் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பகத்சிங் மீது வலை வீசுகின்றார்கள். திருச்சிக் கூட்டத்தில் காந்திக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் மோடி. இதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை.
Photo: அமெரிக்கா என்றாலும்.....!’கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அமெரிக்கா தவணை தவறுவது லெமேன் வங்கியின் வீழ்ச்சியைவிடப் பெரிது' என்று 'புளூம்பர்க் பிசினஸ் வீக்'என்ற பத்திரிகை அலறுகிறது.
                         -’தி இந்து’ நாளிதழ் -

அமெரிக்காவின் மொத்த கடன் சுமை 17.5 டிரில்லியன் டாலர்கள். இதில் கணிசமான அளவு இதர நாடுகள் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் செய்திருக்கும் முதலீடுகள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர்களாகும். 1.28 டிரில்லியன் டாலர்கள் முதலீட்டுடன் சீனா இதில் முதலிடம் வகிக்கின்றது. இந்தியாவும் தன் பங்கிற்கு 59.1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. ஒரு மாதம் தொடங்கி முப்பது வருட வரையிலான இத்தகைய முதலீடுகளுக்கு சராசரியாக மிகக் குறைந்த அளவில் 2.5 சதவீத வட்டியே வழங்கப்படுகின்றது. இருப்பினும் இந்த அளவிற்கு உலக நாடுகள் இத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்றால்.....அதற்கு காரணம்...வட்டி டாலரில் வழங்கப்படுவதும் முதலீடுகளுக்கு அமெரிக்க அரசு அளிக்கும் உத்தரவாதமும் தான். இந்த உத்திரவாதம் பொய்த்து விட்டால்........புளூம்பெர்க்கின் கவலை முற்றிலும் நியாயமே
அமெரிக்கா என்றாலும்.....!’கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அமெரிக்கா தவணை தவறுவது லெமேன் வங்கியின் வீழ்ச்சியைவிடப் பெரிது' என்று 'புளூம்பர்க் பிசினஸ் வீக்'என்ற பத்திரிகை அலறுகிறது.
-’தி இந்து’ நாளிதழ் -

அமெரிக்காவின் மொத்த கடன் சுமை 17.5 டிரில்லியன் டாலர்கள். இதில் கணிசமான அளவு இதர நாடுகள் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் செய்திருக்கும் முதலீடுகள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர்களாகும். 1.28 டிரில்லியன் டாலர்கள் முதலீட்டுடன் சீனா இதில் முதலிடம் வகிக்கின்றது. இந்தியாவும் தன் பங்கிற்கு 59.1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. ஒரு மாதம் தொடங்கி முப்பது வருட வரையிலான இத்தகைய முதலீடுகளுக்கு சராசரியாக மிகக் குறைந்த அளவில் 2.5 சதவீத வட்டியே வழங்கப்படுகின்றது. இருப்பினும் இந்த அளவிற்கு உலக நாடுகள் இத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்றால்.....அதற்கு காரணம்...வட்டி டாலரில் வழங்கப்படுவதும் முதலீடுகளுக்கு அமெரிக்க அரசு அளிக்கும் உத்தரவாதமும் தான். இந்த உத்திரவாதம் பொய்த்து விட்டால்........புளூம்பெர்க்கின் கவலை முற்றிலும் நியாயமே

இன்று அக்டோபர் 16.
ஈகைத் திருநாள் மற்றும் உலக உணவு தினம்.

நோன்பு மாதத்தின் முத்தாய்ப்பாக அமைவது ஈகைப் பெருவிழா.
ஈகை குணத்தின் மாண்பை உயர்திப் பிடிப்பதாக இந்நாள்
அமைந்துள்ளது. தங்களுக்கு மிகவும் பிடித்த உணவை தயாரித்து
ரத்த சம்பந்தமே இல்லாத ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும்
என்று ‘பித்ர்’ போதிக்கின்றது.

அக்டோபர் 16 ஐ. நா சபையால் ‘உலக உணவு தினமாக’ கொண்டாடப்
படுகின்றது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு
வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த தினத்தின் பிரதான நோக்கமாகும்.
பசியின் காரணமாக ஆண்டு தோறும் 3.5 கோடி பேர் உயிரிழப்பதாக
ஐ. நா வின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஈகைத் திருநாளும் உலக உணவு தினமும் இணைந்து வந்திருப்பது
ஒரு எதேச்சையான நிகழ்வாக இருக்கலாம்.....ஆனால்......இரண்டுமே
வலியுறுத்திக் கூறுவது.........”.பாரினில் பசிப்பிணி நீங்க வேண்டும்’

Saturday, 12 October 2013

HIDDEN CAMERA

HIDDEN CAMERA
சார்......போஸ்ட்.நகர எல்லையில் இருக்கும் எங்கள் காலனிக்கு கொரியரில் தபால் வந்தால்.....வீட்டிற்கு தபால் வராது. மாறாக...கொரியர் ஆபீசுக்கு வந்து தபாலை வாங்கிச் செல்லுங்கள் என்று போன் தான் வரும். தபாலை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். வருமான வரித்துறை ‘பான் கார்டுகளை’ இந்த கொரியர்கள் மூலமாகத் தான் அனுப்புகிறது. அவர்கள் அலுவலகத்திற்கு சென்று கார்டை வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாய் மொய் வேறு அழவேண்டும். இதற்கு மாறாக,....மொட்டை வெய்யிலில் பழைய சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்து கேட்டைத் திறந்து காலிங் பெல்லை அடித்து...சிரிப்புடன் ஒரு வணக்கம் போட்டு தபாலைக் கொடுக்கும் அந்த ஐம்பது வயது தபால்காரரைப் பார்க்கும் போது.....மனது பதறும். உட்காரச் சொல்லி தண்ணிர் கொடுத்து சற்று இளைபாறச் செய்துவிட்டுத் தான் அனுப்புவேன். இதுவெல்லாம்....காலத்தின் கோலமல்ல.....உலகமயம் செய்த அலங்கோலம்.

Friday, 11 October 2013

இயற்பியலுக்கான நோபல் பரிசு ‘கடவுள் துகளை’ கண்டறிந்த விஞ்ஞானிகள்.... ஸ்காட்லாந்த் நாட்டைச் சார்ந்த 84 வயதான ‘ஹிக்ஸ்’ மற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 80 வயதான ’எங்லர்ட்’ ஆகிய இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

கடவுளுக்கு இதில் தொடர்பும் பெருமையும் இருக்கிறதோ இல்லையோ இந்தியர்களுக்கும் இந்தியாவிற்கும் இதில் பெருமைப் பட நிறையவே காரணங்கள் உள்ளன. துகள்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைன் மற்றும் அவருடைய சக இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸூம் ஒரு வகைத் துகள்களை கண்டறிந்து பெளதீக உலகிற்கு அறிமுகப்படுத்திய போது, இந்திய விஞ்ஞானி போஸின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அந்த வகை துகள்கள் ‘போஸான்கள்’ என அழைக்கப் பட்டன. அவற்றுள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ‘நிறையை’ கொண்டு சேர்க்கும் குறிப்பிட்டதொரு போஸானை கண்டறிந்தார் விஞ்ஞானி ‘ஹிக்ஸ்’. அதனால் அந்த துகள் இன்று ‘ஹிக்ஸ் போஸான்’ என்று அழைக்கப் படுகின்றது. ஆகவே, இந்த நோபல் பரிசில் ந்மது விஞ்ஞானி போஸிற்கும் பெருமை சேர்க்கப்படுகின்றது. இந்த மிகப் பிரம்மாண்ட ஆய்வில் சக்தி வாய்ந்த நூற்றுக்கணக்கான மின் காந்தங்கள் உள்ளிட்டு பல் வேறு உபகரணங்களை தயாரித்து வழங்கி டாடா ஆராய்ச்சி மையம், இந்திய அணுசக்தி மையம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விஞ்ஞான தொழில் நுட்ப கழகங்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளன. ஆகவே, இந்த நோபல் பரிசில் சந்தோஷப் பட இந்தியர்களாகிய நமக்கு நிறையவே காரணங்கள் உள்ளன.

               ஹிக்ஸ்                                                                                        எங்லர்ட்

 ”காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
  காண்ப மென்றோ?
  வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
  காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
  காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”

- பாரதி

கண் முன் காணப்படுபவை எல்லாம் பொய்...’எல்லாம் மாயை’ - என்ற மாயா வாதத்தை த்ன் காலத்திலேயே தகர்ந்தெறிந்தவன் பாரதி. கண் முன் நிலவுவதும் உலவுவதுமே உண்மையாகும். இதுவல்லாத எதுவுமே உண்மையற்றது, உறுதியற்றது.   ‘பொருள் முதல் வாதத்தை’ இவ்வளவு எளிதாக கவிதை வடிவில் வேறு எவ்ராலும் விளக்கிக் கூற இயலுமா என்பது சந்தேகமே.

Monday, 7 October 2013

ஆதார் அட்டை - உச்ச நீதிமன்ற வழக்கு

ஆதார் அட்டையின் சாதகமான பயன்பாடுகள் எவையென்பது ஒரு புறமிருக்க....பாதகமான விஷயம்...இதைக் காரணமாகக் காட்டி பல கோடி பயனாளிகளை ’ மானிய சமையல் எரிவாயு’ திட்டத்தில் இருந்து வெளியெற்றி விட மத்திய அரசு முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. வழக்கு நிலுவையில் இருக்கவே எரி சக்தி துறை அமைச்சர்....”மானிய சிலிண்டர் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற எங்கள் நிலை பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை”...என்று அறிவித்திருப்பது இதைத் தான் காட்டுகிறது. நாடு முழுதும் 40 சதவீதம் பேருக்குக் கூட ஆதார் அட்டை வழங்கப் படவில்லை. மீதமுள்ளவர்களுக்கு வழங்குவதற்கு எவ்வித முயற்சிகளும் எடுக்கப் படவில்லை. தமிழகத்தில் தற்சமயம் ஆதார் அட்டை வழங்குவதற்கு எந்த ஒரு ஏற்பாடும் இல்லை. ஆனால்... அடுத்த மாதத்தில் இருந்து ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு மானிய விலை சிலிண்டர் வழங்கப்படாது என்ற மிரட்டல் வேறு. ஆதார் அட்டை அவசியம் தான் ஆனால்......அதை அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டியது அதை விட அவசியம்.

Friday, 4 October 2013

 • Ravindran Krishnamurthy விவசாயத்திற்கு ஆட்சியாளர்களால் வேண்டா வெறுப்பாக வழங்கப்படும் ஒரு சில சொற்ப மானியங்களை....’நிறைய சும்மாக்கள்’...என குறிப்பிடுவது அர்த்தமற்றது. பசுமை புரட்சி, உற்பத்தி இலக்கீடுகள்....போன்ற பல சமூக, பொருளாதார இலக்குகளை அரசு எட்டுவதற்காக, அந்த திசை வழியில் விவசாயிகளை திருப்புவதற்காக அளிக்கப்படும் ஊக்குவிப்பு தான் மானியங்கள்...இலவசங்களோ..சும்மாக்களோ அல்ல. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உற்பத்தி செலவை முழுமையாக ஈடு செய்யும் அளவிற்கு விவசாய மானியங்கள் அளிக்கப்படுகின்றன.