Friday, 10 January 2014

பிரேசில் - இயேசு


Christ the Redeemer is a statue of Jesus Christ in Rio de Janeiro, Brazil


Photo: Christ the Redeemer is a statue of Jesus Christ in Rio de Janeiro, Brazil

அராஜகத்தை கண்டிப்போம் !



இந்திய பெண் தூதரக அதிகாரியும் இளந்தாயுமான தேவயானியை
அமெரிக்க போலீஸார் கைவிலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்று
அவமானப் படுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம்.
-- செய்தி

அராஜகத்தை கண்டிப்போம் !


இந்தியத் தலைவ்ர்களை, உயர் அதிகாரிகளை மற்றும் இந்திய பிரபலங்களை அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டு தான் வருகின்றது. இருந்தாலுமே கூட அமெரிக்கா செல்வதற்கும் விசா பெறுவதற்கும் கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் உள்ளது,( புதிய பிரதமர் வேட்பாளர் உள்பட ). அதே நேரத்தில் சோதனை என்ற பெயரில் இப்படி அவ்மானப்படுத்தும் நாடு சொர்க்கபுரியாக இருந்தாலும் தான் செல்ல விரும்பவில்லை என்று உரத்து சொன்ன அன்றைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்ற தலைவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்பது அவரவர் கையில் தான். இதிலென்ன தவறு
இருக்கிறது, சோதனைகளுக்கு ஆட்படத் தானே வேண்டும் என பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும் எழுதும் இந்தியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். பதிலுக்கு இப்படி கடுமையான சோதனைகளை இங்கு வரும் அமெரிக்கர்களிடம் ந்ம்மால் செய்ய இயலுமா ? போபால் விஷவாயு புகழ் அமெரிக்க ஆண்டர்சனை இன்று வரை நம்மால் ஏதுமேசெய்ய இயலவில்லை.

நிறவெறி வெள்ளயர்களை அவர்களது சொந்த தென்னாப்பிரிக்க நாட்டிலேயே தீரமுடன் எதிர் கொண்ட காந்தி பிறந்த தேசத்து மக்கள் என்ற உணர்வை நம் இந்திய மக்களிடையே மேலோங்கச் செய்வது தான் இன்றைய அவசர அவசியத் தேவை.

‘நோட்டா’



‘நோட்டா’ எனும் அபாய மணி அலறட்டும்....!


தங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள ‘யாருக்கும்
வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற எச்சரிக்கை மணியை
மக்கள் ஒலிக்கத் துவங்கி விட்டனர் என்பதையே ஏற்காடு
தேர்தலில் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள் தெளிவாக்குகின்றன.

மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கு மென்மேலும் தொடரும் பட்சத்தில் ‘நோட்டா’ விரைவில் முதலிடத்தைப் பிடித்து இதர அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

’இந்த தேர்தலில் நோட்டாவிற்கு ஆதர்வாக மக்களிடம் வாக்கு சேகரித்தவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது ஜனநாயக விரோத்மானது, கண்டிக்கத்தக்கது. மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவது அப்படி நியாயமோ அதைப் போலவே நோட்டாவிற்காக ஆதரவு திரட்டுவதும் முற்றிலும் நியாயமே.

நோட்டா முதலிடம் பிடித்தால் முடிவு என்ன என்பதை தேர்தல் ஆணையம் தெளிவாக்க வேண்டும். நோட்டா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாக்குகள் பெற்றாலே தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற ஏற்பாடு இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகளிடம் ஒரு நியாயமான அச்ச உணர்வு ஏற்படும்.

ஸ்டார்ட்.......காமெரா.......ஆக்‌ஷன்....!

Photo: ஸ்டார்ட்.......காமெரா.......ஆக்‌ஷன்....!

Cumbrian Mountain Express - Britain மனங்கவரும் மலை ரயில்

Photo: Cumbrian Mountain Express - Britain


மனங்கவரும் மலை ரயில்

அது ஒரு காதற்காலம்




அது ஒரு காதற்காலம்


அது ஒரு காதற் காலம்
பூவனமெல்லாம்
பூத்தூறலாய் புதுவசந்த்ம்
எண்ணிலா பூக்களில் தான்
எத்துணை வண்ணங்கள்
எத்துணை ஜாலங்கள்
அன்றலர்ந்த மலர்களின் 
அணிவகுப்பை காண்பதற்கு
ஆவலாய்த் திரண்டன
அலைஅலையாய் வண்டுக் கூட்டம்
வண்டுகள் மொய்க்காத மலருண்டோ
அவற்றுக்கு தேன்தர மறுத்த பூவுண்டோ
மயக்கும் மலர்களும் மொய்க்கும் வண்டுகளுமாய்
மலர்வனமெங்கும் மகிழ்ச்சிப் பெருவெள்ளம்
கானகமெங்கும் அது ஒரு காதற்காலம்

தனி வழி

தனி வழி


” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் 
சொல்லலாம். 
ஆனால், அது முற்றிலும் சாத்தியமற்றது. 
சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் 
எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது.
யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.”