Saturday, 26 October 2013

விலையில்லா விஷயங்கள்...!

விலையில்லா விஷயங்கள் !

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வகை தொகை இல்லாமல் இலவச திட்டங்களை அறிவிப்பது நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்த இயலாமல செய்து விடும். இவற்றையும் அவர்களின் தேர்தல் அறிக்கைகளையும் முறைப்படுத்தக் கூடிய சட்டவிதிகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லாத சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் “

---உச்ச நீதிமன்றம் பரிந்துரை.

·         இலவசத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன. கட்சிகளோ அதன் தலைவர்களோ தங்கள் சொந்த பணத்தை இவற்றுக்காக செலவிடுவதில்லை. மக்களுக்கு இந்த புரிதல் வேண்டும்.

·         இலவசத் திட்டங்களை அறிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அவற்றின் பயனாளிகளின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது, எண்ணிக்கையும் பல கோடிகளாக உள்ளது என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

·         இந்திய அரசியல் கட்சிகளும் மக்களை தொடர்ந்து இலவசங்களுக்காக ஏங்கும் நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன. மீனைக் கொடுகிறார்களே தவிர மீன் பிடிக்க கற்றுத் தருவதில்லை.

·         தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிடும் இலவசத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பீடு எவ்வளவு அதற்கான நிதியை அவர்கள் எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். (தங்களை கசக்கிப் பிழிந்து எடுத்தச் சாற்றில் ஒரு பகுதியைத் தான் இலவசம் என்ற பெயரில் தங்களுக்கே குடிக்க கொடுக்கிறார்கள் என்பது அப்போது அப்பாவி மக்களுக்கு புலப்படும்)

·         தேர்தலுக்குப் பிந்தைய இலசத் திட்ட அமலாக்கம் என்பது தான் மிக முக்கியமான கட்டமாகும். பொருட்களை வாங்கும் முறை, விலை, தரம், பயனாளிகள் தேர்வு அவர்களுக்கு வழங்கும் முறை ஆகியனவே மிக முக்கியமாக கண்காணிக்கப் படவேண்டிய அம்சங்களாகும். ஆனால், தேர்தல் கமிஷன் இதில் எந்த அளவிற்கு தலையீடு செய்ய இயலும் என்பது விவாத்த்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

தேர்தலின் போது கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் இலவச திட்டங்களுக்கும் இதர காலங்களில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்குமான வித்தியாசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல் படுத்தப்படக் கூடியதொரு சூழலில், இந்தியா போன்றதொரு வளரும் ஜனநாயகத்தில் ‘இலவசம்என்பது ஒரு இழிவான, கேவலமான செயல் என்று எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில், இந்திய மக்களை இலவசங்களை மறுத்து தங்கள் சொந்தகாலில் நிற்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டிய தலையாய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இந்திய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, 16 October 2013

Ravindran Krishnamurthy
 
சாதி வெறிக்கு எதிராக.......

ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநில்ங்களில் இருக்கும் சாதீய ‘கப்’ ப்ஞ்சாயத்துகள் மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கும் மஹா பஞ்சாயத் போன்ற அமைப்புகளை தமிழ நாட்டிலும் ஏற்படுத்திட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள். அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் அடிவருடி சேவகம் செய்து கொண்டே இருக்கவேண்டும், கல்வியும் கூடாது காதலும் கூடாது , அரசு பணிகளும் கூடாது அவர்தம் வாழ்நிலையும் உயரவே கூடாது. ஆதிக்க சாதிகள் வெந்து புழுங்குகிறார்கள். நீ என்ன உயர்த்தி நான் என்ன தாழ்த்தி. இருவரின் உடலிலும் சிவப்பே குருதி. பகுத்தறிவால் சிவந்த இம்மாநிலத்தில் நாம் அணைவருமே சரி நிகர் சமம்.
 
Ravindran Krishnamurthy
 
வொய் திஸ் கொலை வெறி

அன்று
12/12 என்றார்கள்
நேற்று
21/12 என்றார்கள்
நாளை
மாயாண்டி காலண்டர் படி
13/13 என்பார்களோ
உலகம் அழிந்தே தீரவேண்டுமென
வொய் திஸ் கொலை வெறி
 
கண்ணை விற்று........

கிரீச் கிரீச்சென்று
முனகியபடியே சாலையில் சென்றது
மாபெரும் மரத்துண்டுகளை ஏற்றிய
நீண்ட நெடும் சரக்கு ஊர்தியொன்று
இரண்டு மூன்று தலைமுறைகளின்
ஒட்டு மொத்த சவ ஊர்வலமொன்று
கடந்து சென்றதாய் ஒரு நினைப்பு
சிதையுண்ட சுவற்றில் பின்னாளில்
எதை வரையப் போகின்றோம்
 
அன்று.....!

ஜனவரி 21 தேதியிட்ட ’குங்குமம்’ இதழில் எனது ‘கீதா என் காதலி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. நான், மனைவி, மகள் என்று ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மனைவி : “ யாருங்க அந்த கீதா “
மகள் : “பரிசு, சன்மானம் அப்படியெல்லாம் கிடையாதா...”
நான் : கதை பிரசுரமானதே எனக்கு கிடைத்த சன்மானம் தான் “

இன்று.....!

குங்குமம் அலுவலகத்தில் இருந்து என் சிறுகதைக்கு சன்மானமாக ரூ.400-க்கான காசோலை தபாலில் வந்திருந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மகிழ்ச்சியையும் நன்றியையும் ‘குங்குமம்’ இதழுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
Photo: அன்று.....!

நண்பர் ஒருவர் பதிவில் இன்னொருவர் திப்பு சுல்தான் இந்துக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது பதில்..இப்போது உங்களுடன்.

சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.”

மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.
 
Photo: நண்பர் ஒருவர் பதிவில் இன்னொருவர் திப்பு சுல்தான் இந்துக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது பதில்..இப்போது உங்களுடன்.

சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.” 

மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.

மருட்சி...!

மகிழ்ச்சியான மணவிழாவில்
மருட்சியாய் ஒரு முகம்

- - - - - - - - - - - - - -  -
பெண்ணின் அப்பா