Saturday 23 November 2013

அன்பே சிவம்

Photo

வ.உ.சி

இன்று வ உ சி நினைவு தினம்....!

இன்று அவரை காங்கிரஸ் உள்பட பலரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், செக்கிழுத்து, உருக்குலைந்து கண்ணனுர் சிறையிலிருந்து வெளி வந்த வ.உ.சியை வரவேற்க சுப்ரமண்ய சிவா மற்ரும் கணபதி பிள்ளை ஆகிய இருவரைத் தவிர வேறு எவருமே வரவில்லை. கடைசி காலங்களில் அவரும் அவரது குடும்பமும் வறுமையில் வாடியது. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அவரது வறுமை போக்க வசூலித்து அனுப்பிய பணமும் கடைசி வரை அவரைப் போய் சேரவில்லை. அவரது கண்ணெதிரெலேயே அவருடைய சுதேசிக் கப்பல் போட்டியாய் இருந்த ஆங்கிலக் கம்பெனிக்கே விற்கப்பட்டது. வறுமை இன்றளவிலும் அவரது குடும்பத்தினரை துரத்திக் கொண்டு தான் உள்ளது. பள்ளிக் கல்வியைக் கூட தொடர இயலாத நிலையில் வாடிய வ உ சி யின் பேத்திக்கு ஸ்டேட் பேங்க் வங்கி அதிகாரிகள் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தேச விடுதலைக்காக அனைத்தையும் இழந்த இத்தகைய தியாகசீலர்களை நாம் நன்றி பாராட்ட மறந்தால்.....
 
 Photo: இன்று வ உ சி நினைவு தினம்....!

மாமியார் உடைத்தால்......!

நண்பர் ஒருவரின் பதிவில் பங்கேற்ற ஒருவரின் கருத்திற்கு நான் அளித்த மறுதலிப்பு........!

திரு ---------- அவர்களே, மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு மோடி புகழ் பாடும் உங்கள் வேலையை ஒழுங்காகப் போய் செய்யுங்கள். -------- --------- --------- என்ன..? எங்கேயோ இடிக்கிறதா..? உங்கள் வசனம் தான். புத்திமதி அடுத்தவர்களுக்கு சொல்வது மிகச்சுலபம். ஆனால், அதுவே சுற்றி வந்து மீண்டும் நம்மையே தாக்கும் போது....!

மோடி அவரது கட்சியின் புகழை மட்டும் தான் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறாரா ? காங்கிரஸையோ, சோனியாவையோ ராகுலையோ விமர்சிப்பதில்லையா ? மோடியும் உங்களைப் போன்ற அவரது ஆதரவாளர்கள் மட்டும் அனைவரையும் விமர்சித்து பேசலாம் ஆனால் மற்றவர்கள் மட்டும் உங்களை விமர்சித்து பேசக்கூடாது என்பது......சரியல்ல......ஹிட்லர் தான் இந்த வழியில் நடை போட்டவர்.

51 சக்தி தலங்களில் ஒன்றான ‘அம்பாஜி’ குஜராத்தில் ராஜஸ்தான்எல்லையில் ஆரவல்லி மலையடிவாரத்தில் உள்ள்து. ஆண்டு தோறும் செப்டம்பர் மாத்த்தில் நடைபெறும் ‘பதர்வி பூனம்’ திருவிழாவிற்கு நாடெங்கிலும் இருந்து பல லட்சம் பேர் வந்து குவிகின்றனர். அப்போது அமோகமாக நடைபெறும் மிக முக்கியமான தொழில் ‘ விபச்சாரம் ‘. இதர நாட்களிலும் அங்கு பிரதான தொழில் இது தான். 12,000 மக்கள் தொகையில் ஆயிரம் பெண்களின் பிரதான தொழிலே இது தான். இதற்கு அங்கு தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மோடியும் குஜராத் அரசும் தான் காரணமென்று உங்களைப் போல் ‘தத்துப்பித்தென்று’ நான் சொல்லமாட்டேன். அப்பகுதியில் நிலவிவரும் ‘தேவதாசி முறை’ மற்றும் வறுமை போன்றவைகளே இதற்கான பிரதான காரணங்கள். கல்கத்தா ‘சோனா க்ஞ்ச்’ பகுதியில் நடைபெற்று வரும் பாலியல் தொழில் அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்ட சுகபோகமல்ல. சமூக அவலங்களின் வெளிப்பாடே அன்றி வேறல்ல. தொடர்ந்து மே. வங்கத்தை ஆண்டு வந்த கம்யூனிஸ்டுகள் தான் இதற்கு காரணமென்று நீங்கள் குற்றம் சாட்டுவது உங்கள் அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறேதுமில்லை.
 
Photo: நண்பர் ஒருவரின் பதிவில் பங்கேற்ற ஒருவரின் கருத்திற்கு நான் அளித்த மறுதலிப்பு........!

கன்னமிடும் கவிஞர்கள்

Photo

முகநூல் தோழமை

Photo

வளர் தெங்கும் வானுயர் வரையும்

Ravindran Krishnamurthy added a new photo.

Wednesday 6 November 2013

அண்டை நாடுகளுடன்.....

சீனாவுடன் மட்டுமல்ல பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் இண்க்கமானதொரு சூழலை இந்தியா அவசியம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பரஸ்பர நட்பு மக்கள் ஒற்றுமை ஆகியவற்றுக்காக ஐரோப்பிய நாடுகள் நோபல் பரிசினைப் பெறும் போது, ஆசிய நாடுகளான நாம் ஏன் ஒறறுமையுடன் செயல்பட இயலாது.

உலக கொத்தடிமைகள் !

உலக கொத்தடிமைகள் !

உலக கொத்தடிமைகளின் எண்ணிக்கையில் பாதி அளவினர் இந்தியாவில் உள்ளனர் என்ற ஆய்வின் பின்ணணியில் இந்த செய்தியை கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது. முதலாளிகள் உழைப்பாளிகளை கசக்கிப் பிழிவதை இது உணர்த்துகின்ற அதே நேரத்தில், அரசின் சட்டங்களும் அவற்றின் அமுலாக்கமும் எந்த லட்சணத்தில் உள்ளன என்பதையே இவை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. உண்மை நிலைமை இவ்வாறிருக்க, நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல்.....என்றெல்லாம் சி. பி. ஐ முதலாளிகளை தொடர்ந்து விசாரித்து வருவதால் ந்மது நாட்டின் ‘இமேஜ்’ குறைந்து வருகிறது, அன்னிய முதலீடுகள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் இந்திய முதலாளிகள் அமைப்பான ‘அசோசம்’ கவலை தெரிவித்துள்ளது.

வாழ்க்கை ஓடம்

Photo

" அகண்ட பாரதம் “

  1. " அகண்ட பாரதம் “

    குஜராத் அரசின் சார்பில் ‘படேலின் முழு உருவச் சிலை’ நிறுவப்படுதல் தொடர்பான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று (31-10-2013) தமிழ் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது. சங் பரிவார அமைப்புகளின் ‘அகண்ட பாரத’ கனவுடன் படேலை சம்பந்தப்படுத்தி அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், உண்மை வரலாறோ.....!

    அகண்ட பாரதக் கனவு கண்டவர் தேசப் பிரிவினையை ஆதரித்திருப்பதற்கு எள்ள்ளவும் வாய்ப்பில்லை. ஆனால், அன்றைய சூழலில் மவுண்ட்பேட்டன் முன்வைத்த தேசப்பிரிவினைத் திட்டத்தை ஆதரித்த முதல் காங்கிரஸ் தலைவர் ‘படேல்’ தான். காங்கிரஸூம், காந்தியும், நேருவும் படேலின் முடிவை கடுமையாக எதிர்த்தனர். ‘ஒரு பிரிவினையை ஏற்க மறுத்தால்...நாடு பல பிரிவினைகளை சந்திக்க வேண்டி வரும்’ – என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காந்தியும் நேருவும் பட்டேலின் கருத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்ட்த்தில் நடை பெற்ற ஓட்டெடுப்பில் பட்டேலின் பிரிவினைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அதையொட்டி, பிரிவினைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியப் பகுதிப் பிரதிநிதியாக படேல் பங்கேற்றார்.

    இத்தகைய ஒரு தீர்க்கதரிசனத்துடன் உறுதியாக செயல்பட்ட ‘இரும்பு மனிதரை’ அகண்ட பாரத கனவு கண்டவராக சித்தரிப்புது........வரலாற்றுத் திரிபு வாதம், கடைந்தெடுத்த அரசியல் அரசியல் அநாகரீகம்.
    IRON MAN OF INDIA....AND......NAMO

    When reports reached Patel that large groups of Sikhs were preparing to attack Muslim convoys heading for Pakistan, Patel hurried to Amritsar and met Sikh and Hindu leaders. Argued that attacking helpless people was cowardly and dishonourable,

    "Here, in this same city, the blood of Hindus, Sikhs and Muslims mingled in the bloodbath of Jallianwala Bagh. I am grieved to think that things have come to such a pass that no Muslim can go about in Amritsar and no Hindu or Sikh can even think of living in Lahore. The butchery of innocent and defenseless men, women and children does not behave brave men...”

    இரும்பு மனிதரும்....பிரதமர் கனவும்.

    ’ டெல்லி மற்றும் பஞ்சாப் போலீஸ் அமைப்புகளுக்குள் மதவெறி ஊட்டப்பட்டிருப்பதையும் அவர்களால் முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க இயலாது என்பதை உணர்ந்த ‘படேல்’ இந்திய ராணுவத்தின் மதராஸ் ரெஜிமெண்ட்டை வரவழைத்தார். மதக்கலவரத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க உத்திரவிட்டார்.’

    மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ‘பட்டேலை’ இந்துத்வாவை உயர்த்திப் பிடிக்கும் ‘மோடி’ போற்றி புகழ்வதின் மர்மம்...............பிரதமர் கனவு தான்.

தீபஓளி பரவட்டும்

Photo

கண்ணை விற்று.....

கண்ணை விற்று........

கிரீச் கிரீச்சென்று
முனகியபடியே சாலையில் சென்றது
மாபெரும் மரத்துண்டுகளை ஏற்றிய
நீண்ட நெடும் சரக்கு ஊர்தியொன்று
இரண்டு மூன்று தலைமுறைகளின்
ஒட்டு மொத்த சவ ஊர்வலமொன்று
கடந்து சென்றதாய் ஒரு நினைப்பு
சிதையுண்ட சுவற்றில் பின்னாளில்
எதை வரையப் போகின்றோம்

அன்றிலும்.....மகன்றிலும் !

அன்றிலும்.....மகன்றிலும் !

”உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி”

என்ற தன் ராமாயணப் பாடல் வரிகள் மூலமாக கம்பர்
’மகன்றில்’ மற்றும் ’அன்றில்’ ஆகிய இரண்டு வகை
பெடையை விட்டுப் பிரியாத பறவையினங்களைப்
பற்றி குறிப்பிடுகின்றார். மகன்றில் என்பது நீர்ப்பறவை
அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை. மழைக்
காலத்தில் தம் இணையை விட்டு நீங்காமல் தழுவிக்
கொள்ளும் தன்மையன இவை.

 Photo: அண்டில் !!

"நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் " என்று சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டக்  காலம் முதல் , ஜீன்ஸ் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் "அன்றில் பறவை ரெட்டைப் பிறவி  ; ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி ; பிரியாதே, விட்டுப் பிரியாதே  " என்று பாடப்பட்டக் காலம் வரை ....

ஏன் ?.... இன்றும் கூட கவிஞர்களால் ,எழுத்தாளர்களால் தொடர்ந்து புகழப்படும்  " அன்றில் " பறவையை, "அண்டில்"  
என்றே எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் அழைப்பது வழக்கம் !.

ஆங்கிலத்தில் ' Black Ibis ' என்று அழைக்கப்படும் அன்றில் பறவை கூரிய ,நீண்ட , வளைந்த அலகினை உடையது . எனவே 'அரிவாள் மூக்கன்' என்றும் அழைப்பார்கள் . இறக்கையின் மேல் வெண் திட்டினையும், தலையின் மேல் சிவப்பு நிறத் திட்டினையும் உடையது. 

பெரும்பாலும் பனை அல்லது தென்னை மரங்களின் மேலே வசிக்கும் ...விவசாய நேரங்களில் மருத நில வயல் வெளிகளில் கூட்டமாக மேயக் காணலாம் .

தன் இணை இறப்பின், தானும் இறந்து விடும் என்று கூறப்பட்டாலும் பறவையியலாளர்கள் இக் கருத்தினை ஏற்பது இல்லை ! இதற்கு இணையாக வட  மாநிலங்களில் காணப்படும்  ' Sarus Crane ' எனும் பறவையைக் குறிப்பிடுவார்கள் ...இந்தப் பறவை தன் இணையோடு ஆடும் நடனம் அவ்வளவு பிரசித்தம் !!

ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நினைவுக்கு வருகிறது ....

வேட்டையாடிகளால் அன்றில் பறவை இனம் அழிக்கப்படுவதைத்  தடுத்திடக் கோரி தொண்ணூறுகளின் இறுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் சட்ட மன்றத்தில் வினா ஒன்று தொடுத்திருந்தேன் ...

சபாநாயகரால் என் வினா அனுமதிக்கப்பட்டு வழக்கப்படி சம்பந்தப்பட்ட வனத் துறைக்கு பதிலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது .

பேரவையில் கேள்வி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படும் முன்னர், துறையில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது ....திறந்து படித்தேன் .

' வக்கா '( Night Heron ) உள்ளிட்ட சில நீர்ப் பறவைகளைக் குறிப்பிட்டு அத்துடன் சங்க இலக்கியத்தில் புள்ளினம் ' எனும் கழக வெளியீடான திரு.சாமி அவர்களின் நூலில் இருந்து சில பகுதிகளையும்  இணைத்து , இதில் எந்தப் பறவை 'அன்றில் ' என்று நான்  தெரிவித்தால், அதை அவர்கள் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பது  பற்றித் தெரிவிக்க வசதியாய் இருக்கும் என்று என்கிட்டயே திருப்பி கேள்வி கேட்டு அனுப்பி இருந்தார்கள் !!!! ;)

வேடிக்கை என்னவென்றால்,அதில் ஒன்று கூட 'அன்றில்' இல்லை !! ;)