Friday 10 January 2014

பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


Photo: பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “


Photo: பெங்களூரு சட்டமன்றம் - ” விதான் சவுதா “

பாபன் பாலம்


பாபன் பாலம்

Photo: ’பாம்பன் பாலம்’

மியாமி கடற்கரை


மியாமி கடற்கரை


Photo: மியாமி கடற்கரை

கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !


கூட்டணிகளும் கொள்கைகளும் ! ! !

கடவுள் மறுப்பு, நால் வருண எதிர்ப்பு சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்ற கொள்கை வழிகளின் அடிப்படையில் தோன்றி வளர்ந்தவை தான் தமிழக திராவிட கட்சிகள். பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இந்த கொள்கை வழியில் உறுதியாக செயல்பட்டதின் காரணமாகவே தமிழகம் போற்றும் மக்கள் தலைவர்களாக இன்றளவிலும் திகழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து திராவிட கட்சிகளின் ஆளுமையின் கீழ் தமிழகம் இருந்து வருவதற்கும் இவர்களின் கொள்கைத் தாக்கமே பிரதான காரணம்.
ஆனால், இன்றைய தமிழக திராவிட கட்சிகளோ......? தங்கள் சுயநலன்களே பிரதானம் என்ற சூழலில் அந்த தலைவர்கள் உயர்த்திப் பிடித்த சுமரியாதைக் கொள்கைகளை காற்றிலே பறக்கவிட்டு விட்டு இந்துத்வா கொள்கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க உடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டே வருகின்றன. இப்போது மதிமுக அந்தக் கடமையை சிரமேற் கொண்டுள்ளது.
ஆனால், பகுத்தறிவுப் பாரம்பரியமிக்க தமிழக மக்கள் இத்தகைய கொள்கை குளறுபடி கூட்டணிகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் இத்தகைய கொள்கைத்தடம் புரளும் திராவிடக் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களிடம் ஒரு சில விளக்கங்களை எதிர்பார்க்கிறார்கள்.

# நீங்கள் இது வரையிலும் உயர்த்திப் பிடித்து வந்த சுமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகள் என்னவாயின ?

# நால்வருண அடிப்படையிலான ‘இந்துத்வா’ கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

# ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற வசதியான கொள்கை வழிக்கு வந்துவிட்ட சூழலில்......பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அவ்வப்போது தொட்டுக் கொள்வதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். ‘திராவிட’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து விலக்கி வையுங்கள். அந்த உன்னத சுயமரியாதை இயக்கத் தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் குறைந்தபட்ச நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்க இயலும்.

சேது சமுத்திர திட்டம், ராமர் கோவில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட வேறுபல பிரச்சினைகளிலும் இத்தகையதொரு புதிய கூட்டணி சூழ்நிலையில் உங்களது புதிய நிலைபாடுகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் விடை கொடுங்கள்.

புத்தாண்டு புலரட்டும்

மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?



மூன்றாவது இடத்திற்கு போனது ஏன் ?

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மட்டுமே அன்னிய முதலீடுகளை அள்ளிக் கொண்டு வந்து விடாது. பெரிதாக கட்டுப்பாடுகளை சீனாவோ அல்லது பிரேசிலோ தளர்த்தி விடவில்லை. இருப்பினுமே முதலிரண்டு இடங்களை அவை பிடித்துள்ளனவென்றால் வேறு பல முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஆட்சிகள் மாறினாலும் மாறாமல் நிலையாக இருக்கும் தொழில் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள். அடுத்து, தங்குதடையற்ற மின்சாரம், மேம்படுத்தப்பட்ட சாலைகள் போன்ற அடிப்படை கட்டுமான வசதிகள். இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாக அமைப்பு. கட்டுப்பாடுகளும் ஊழலும் சேர்ந்தே இருப்பன. கட்டுப்பாடுகள் உண்மையிலேயே தளர்த்தப்பட வேண்டுமாயின் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

அவனும்......இவனும்...!


அவனும்......இவனும்...!


இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தால் இந்துவான காந்தியையே சுட்டுக் கொன்ற இந்து மத வெறியன் நாதுராம் கோட்சே

செல்வா உள்ளிட்ட தமிழர் தலைவர்களுடன் இணக்கமாக இருந்த காரணத்தால் புத்தமதத்தவரான பண்டாரநாயாகவை சுட்டுக் கொன்ற புத்தமதத் துறவி சோமராம தேரோ.