Friday 10 January 2014

அராஜகத்தை கண்டிப்போம் !



இந்திய பெண் தூதரக அதிகாரியும் இளந்தாயுமான தேவயானியை
அமெரிக்க போலீஸார் கைவிலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்று
அவமானப் படுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம்.
-- செய்தி

அராஜகத்தை கண்டிப்போம் !


இந்தியத் தலைவ்ர்களை, உயர் அதிகாரிகளை மற்றும் இந்திய பிரபலங்களை அமெரிக்கா ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டு தான் வருகின்றது. இருந்தாலுமே கூட அமெரிக்கா செல்வதற்கும் விசா பெறுவதற்கும் கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் உள்ளது,( புதிய பிரதமர் வேட்பாளர் உள்பட ). அதே நேரத்தில் சோதனை என்ற பெயரில் இப்படி அவ்மானப்படுத்தும் நாடு சொர்க்கபுரியாக இருந்தாலும் தான் செல்ல விரும்பவில்லை என்று உரத்து சொன்ன அன்றைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்ற தலைவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்பது அவரவர் கையில் தான். இதிலென்ன தவறு
இருக்கிறது, சோதனைகளுக்கு ஆட்படத் தானே வேண்டும் என பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும் எழுதும் இந்தியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். பதிலுக்கு இப்படி கடுமையான சோதனைகளை இங்கு வரும் அமெரிக்கர்களிடம் ந்ம்மால் செய்ய இயலுமா ? போபால் விஷவாயு புகழ் அமெரிக்க ஆண்டர்சனை இன்று வரை நம்மால் ஏதுமேசெய்ய இயலவில்லை.

நிறவெறி வெள்ளயர்களை அவர்களது சொந்த தென்னாப்பிரிக்க நாட்டிலேயே தீரமுடன் எதிர் கொண்ட காந்தி பிறந்த தேசத்து மக்கள் என்ற உணர்வை நம் இந்திய மக்களிடையே மேலோங்கச் செய்வது தான் இன்றைய அவசர அவசியத் தேவை.

No comments:

Post a Comment