Friday 10 January 2014

‘நோட்டா’



‘நோட்டா’ எனும் அபாய மணி அலறட்டும்....!


தங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள ‘யாருக்கும்
வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற எச்சரிக்கை மணியை
மக்கள் ஒலிக்கத் துவங்கி விட்டனர் என்பதையே ஏற்காடு
தேர்தலில் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள் தெளிவாக்குகின்றன.

மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கு மென்மேலும் தொடரும் பட்சத்தில் ‘நோட்டா’ விரைவில் முதலிடத்தைப் பிடித்து இதர அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

’இந்த தேர்தலில் நோட்டாவிற்கு ஆதர்வாக மக்களிடம் வாக்கு சேகரித்தவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது ஜனநாயக விரோத்மானது, கண்டிக்கத்தக்கது. மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவது அப்படி நியாயமோ அதைப் போலவே நோட்டாவிற்காக ஆதரவு திரட்டுவதும் முற்றிலும் நியாயமே.

நோட்டா முதலிடம் பிடித்தால் முடிவு என்ன என்பதை தேர்தல் ஆணையம் தெளிவாக்க வேண்டும். நோட்டா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாக்குகள் பெற்றாலே தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற ஏற்பாடு இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகளிடம் ஒரு நியாயமான அச்ச உணர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment