Wednesday 16 October 2013


இன்று அக்டோபர் 16.
ஈகைத் திருநாள் மற்றும் உலக உணவு தினம்.

நோன்பு மாதத்தின் முத்தாய்ப்பாக அமைவது ஈகைப் பெருவிழா.
ஈகை குணத்தின் மாண்பை உயர்திப் பிடிப்பதாக இந்நாள்
அமைந்துள்ளது. தங்களுக்கு மிகவும் பிடித்த உணவை தயாரித்து
ரத்த சம்பந்தமே இல்லாத ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும்
என்று ‘பித்ர்’ போதிக்கின்றது.

அக்டோபர் 16 ஐ. நா சபையால் ‘உலக உணவு தினமாக’ கொண்டாடப்
படுகின்றது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு
வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த தினத்தின் பிரதான நோக்கமாகும்.
பசியின் காரணமாக ஆண்டு தோறும் 3.5 கோடி பேர் உயிரிழப்பதாக
ஐ. நா வின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஈகைத் திருநாளும் உலக உணவு தினமும் இணைந்து வந்திருப்பது
ஒரு எதேச்சையான நிகழ்வாக இருக்கலாம்.....ஆனால்......இரண்டுமே
வலியுறுத்திக் கூறுவது.........”.பாரினில் பசிப்பிணி நீங்க வேண்டும்’

No comments:

Post a Comment