Saturday 12 October 2013

சார்......போஸ்ட்.



நகர எல்லையில் இருக்கும் எங்கள் காலனிக்கு கொரியரில் தபால் வந்தால்.....வீட்டிற்கு தபால் வராது. மாறாக...கொரியர் ஆபீசுக்கு வந்து தபாலை வாங்கிச் செல்லுங்கள் என்று போன் தான் வரும். தபாலை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். வருமான வரித்துறை ‘பான் கார்டுகளை’ இந்த கொரியர்கள் மூலமாகத் தான் அனுப்புகிறது. அவர்கள் அலுவலகத்திற்கு சென்று கார்டை வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாய் மொய் வேறு அழவேண்டும். இதற்கு மாறாக,....மொட்டை வெய்யிலில் பழைய சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்து கேட்டைத் திறந்து காலிங் பெல்லை அடித்து...சிரிப்புடன் ஒரு வணக்கம் போட்டு தபாலைக் கொடுக்கும் அந்த ஐம்பது வயது தபால்காரரைப் பார்க்கும் போது.....மனது பதறும். உட்காரச் சொல்லி தண்ணிர் கொடுத்து சற்று இளைபாறச் செய்துவிட்டுத் தான் அனுப்புவேன். இதுவெல்லாம்....காலத்தின் கோலமல்ல.....உலகமயம் செய்த அலங்கோலம்.

No comments:

Post a Comment