Wednesday 16 October 2013


அநியாயம்.....இது அநியாயம் !


+2 தகுதி அடிப்படையிலான அரசு, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் உள்ள கிளர்க் பணிகளுக்கு அதிக கல்வித்தகுதி என்ற அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகளே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படி எல்லா இடங்களையும் இவர்களே ஆக்கிரமிக்கும் பட்சத்தில் +2, பி.ஏ, பி.எஸ்ஸி, பி.காம் மட்டுமே படித்த வசதி குறைவான மாணவர்களின் கதி என்னாவது ? இவர்களைப் போன்ற லட்சக்கணக்கானவர்கள் தான் இம்மாதிரி தேர்வுகளுக்கு 200, 300 என்று தேர்வுக் கட்டணத்தை வேறு கொட்டி அழுகிறார்கள். குறைந்த பட்சம் இது போன்ற எழுத்தர் பதவிகளுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்ற நடைமுறை அமுல் படுத்தப் பட வேண்டும்.

200, 300, 400 என தேர்வு கட்டண கொள்ளை அடித்து வரும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் தற்போது கட்டணத்தை அதிரடியாக ரு.600 என உயர்த்தியுள்ளது. ரூ.5000 என தேர்வு கட்டணத்தை உயர்த்தி விட்டால் ஏழைகளை ஒட்டு மொத்தமாக தேர்வு எழுத விடாமல் செய்து விடலாமே.

No comments:

Post a Comment