Friday 11 October 2013


இயற்பியலுக்கான நோபல் பரிசு ‘கடவுள் துகளை’ கண்டறிந்த விஞ்ஞானிகள்.... ஸ்காட்லாந்த் நாட்டைச் சார்ந்த 84 வயதான ‘ஹிக்ஸ்’ மற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 80 வயதான ’எங்லர்ட்’ ஆகிய இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

கடவுளுக்கு இதில் தொடர்பும் பெருமையும் இருக்கிறதோ இல்லையோ இந்தியர்களுக்கும் இந்தியாவிற்கும் இதில் பெருமைப் பட நிறையவே காரணங்கள் உள்ளன. துகள்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டைன் மற்றும் அவருடைய சக இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸூம் ஒரு வகைத் துகள்களை கண்டறிந்து பெளதீக உலகிற்கு அறிமுகப்படுத்திய போது, இந்திய விஞ்ஞானி போஸின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அந்த வகை துகள்கள் ‘போஸான்கள்’ என அழைக்கப் பட்டன. அவற்றுள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ‘நிறையை’ கொண்டு சேர்க்கும் குறிப்பிட்டதொரு போஸானை கண்டறிந்தார் விஞ்ஞானி ‘ஹிக்ஸ்’. அதனால் அந்த துகள் இன்று ‘ஹிக்ஸ் போஸான்’ என்று அழைக்கப் படுகின்றது. ஆகவே, இந்த நோபல் பரிசில் ந்மது விஞ்ஞானி போஸிற்கும் பெருமை சேர்க்கப்படுகின்றது. இந்த மிகப் பிரம்மாண்ட ஆய்வில் சக்தி வாய்ந்த நூற்றுக்கணக்கான மின் காந்தங்கள் உள்ளிட்டு பல் வேறு உபகரணங்களை தயாரித்து வழங்கி டாடா ஆராய்ச்சி மையம், இந்திய அணுசக்தி மையம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விஞ்ஞான தொழில் நுட்ப கழகங்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளன. ஆகவே, இந்த நோபல் பரிசில் சந்தோஷப் பட இந்தியர்களாகிய நமக்கு நிறையவே காரணங்கள் உள்ளன.

               ஹிக்ஸ்                                                                                        எங்லர்ட்




No comments:

Post a Comment